சகல தமிழ், சிங்­களப்  பாட­சா­லைகள் மூன்றாம் தவ­ணைக்­காக இன்று ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது. 

அத்­துடன் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தர பரீட்சை விடைத்தாள் மதிப்­பீட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பாட­சா­லைகள் எதிர்­வரும் 6 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­ட்டுள்­ளது.

இது­ தொ­டர்­பாக கல்வி அமைச்சு விடுத்­துள்ள அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

நாட்டிலுள்ள சகல தமிழ், சிங்களப் பாட­சா­லைகள்  மூன்றாம் தவணை கல்வி நட­வ­டிக்­கைக்­காக இன்று 3 ஆம் திகதி ஆரம்­பமாகின்­றன. என்­றாலும் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முதற்­கட்ட விடைத்தாள் மதிப்­பீட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு மத்­திய நிலை­யங்­க­ளாக 37 பாட­சா­லைகள் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. அவை மூன்றாம் தவணை கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக எதிர்­வரும் 6 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­படும்.

நாட்­டி­லுள்ள சகல தமிழ், சிங்­களப் பாட­சா­லைகள் இரண்டாம் தவணை விடு­மு­றைக்­காக கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மூடப்­பட்­டி­ருந்­தன. 

இதே­வேளை, சகல முஸ்லிம் பாட­சா­லை­களும் இரண்டாம் தவ­ணைக்­காக கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி  விடுமுறை வழங்கப்பட்டு, மீண்டும் மூன்றாம் தவணைக்காக 27 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.