இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவும்; ஆபத்தையும்  தொடரை இழக்கும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளது

வெற்றி பெறுவதற்காக 245 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணிசார்பில் விராட்கோலியும் ரகானேயும் அரைசதங்களை பெற்றபோதிலும் ஏனைய வீரர்கள் சோபிக்காததால் அணி தோல்வியை எதிர்கொள்கின்றது.

முன்னதாக இங்கிலாந்து  அணி தனது இரண்டாவது இனிங்சில் அனைத்து விக்கெட்களையும் 271 ஓட்டங்களிற்கு இழந்தது.