இடைக்கால அறிக்கை புதன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: Vishnu

02 Sep, 2018 | 07:07 PM
image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும், அவர்களின் உறவினர்கள் சார்பிலும் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை காணாமல்போனோர் அலுவலகம் எதிர்வரும் புன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.

இந்த அறிக்கையில் காணாமல்போனோரின் உறவினர்கள் உண்மையை அறிந்துகொள்வதற்கு உள்ள உரிமை மறுக்கப்படக் கூடாது, காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பிலான சர்வதேச பரிந்துரைகளை மேலும் பலப்படுத்த வேண்டும், காணாமலாக்கப்படுதலை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான கொடுப்பனவுகள், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நலன்புரி உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59