(இரோஷா வேலு) 

நிட்டம்புவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையமொன்று சுற்றிவளைத்ததில் ஆணொருவரை கைதுசெய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட் கலகொடிஹேன பிரதேசத்தில் காணப்படும் வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட, அரசாங்கத்தால் வெளியிடப்படுவதை போன்ற ஆவணங்களை போலியாண வகையில் தயாரிக்கும் நிலையமொன்று குறித்து 119 தொலைப்பேசி இலக்கத்துக்கத்தினூடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கமைவாக சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் இவரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சமாதி மாவத்தை கலகொடிஹேண பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரவார்.

இதனையடுத்து குறித்த நிலையத்தை சோதனையிட்ட பொலிஸாரால் அங்கு காணப்பட்ட அச்சு இயந்திரம் உள்ளிட்ட வேறு சில இயந்திரங்களும் அரச நிறுவனங்களுக்குரிய இறப்பர் முத்திரைகள் ஐந்தும், அரசு நிறுவனங்களுக்குரிய முத்திரைக் கொண்ட போலி ஆவணங்களையும் கைபற்றினர்.