அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள கொங்கிறீட் வீதிகள் சேதமடைந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், பிரதேச தவிசாளர், ஆலய  வண்ணக்கர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து தவிசாளர் மற்றும் ஆலய வண்ணக்கர் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை கண்டறிந்ததுடன் கடலைகள் மேலும்  ஊருக்குள் உள்புகுவதை கட்டுப்படுத்தும் வகையில் அவசர நடவடிக்கையாக சுமார் 500 மணல் மூடைகளை இடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் காரணமாக அப் பகுதி மீனவர்களின் உடமைகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.