இன்று சர்வதேச தெங்கு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு, ஒருவார கால அனுஷ்டிப்பு நிகழ்வுகள்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஆரம்ப வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று(02-09-2018) காலை 9.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டன. இந்த வாரம் முழுவதிலும் நாடு முழுவதிலும் தெங்கு தொழில்துறையை மேம்படுத்துவதற்கான ஆயிரம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளமையும் சிறப்பம்சமாகும்.