பனிச்­ச­ரிவில் சிக்கிய ரஷ்­யப் பெண்: 31 வரு­டங்­க­ளின் பின்னர் உறைந்த நிலையில் மீட்பு

Published By: J.G.Stephan

02 Sep, 2018 | 02:56 PM
image

31 வரு­டங்­க­ளுக்கு முன்பு காணாமல் போன ரஷ்ய பெண்ணின் உடல், பனி­ம­லையில் மெழுகு சிலை போல் உறைந்த நிலையில் கண்­டு­பிடிக்­கப்­பட்­டுள்­ளது.

ரஷ்­யாவைச் சேர்ந்­தவர் எலினா பேஸி­கினா, இவர் அந்­நாட்டின் அறி­வியல் தொழில்­நுட்ப துறையில் பணி­யாற்றி வந்­தி­ருக்­கிறார்.

மலை ஏற்­றத்தில் ஆர்வம் கொண்ட எலினா 1987 ஆம் வருடம் தனது ஆறு நண்­பர்­க­ளுடன் ஐரோப்­பாவின் உயர்ந்த மலை­யான எல்­பிரஸ் மலை ஏற்­றத்தில் பங்­கேற்­றி­ருக்­கிறார். அப்­போது அங்கு எற்­பட்ட பனிச்­ச­ரிவில் எலி­னாவும் அவர்­க­ளது நண்­பர்­களும் சிக்கிக் கொண்­டனர்.

இதில் எலினா மற்றும் அவ­ரது நண்­பர்­களை தேடும் பணி நடத்­தப்­பட்டு பின்னர் நீண்ட நாட்­க­ளுக்கு பின்னர் கைவி­டப்­பட்­டது.

இந்த நிலையில் 31 வரு­டங்­க­ளுக்கு பின்னர், அப்­ப­கு­திக்கு சென்ற சுற்­றுலா குழு­வினர்,எலி­னாவின் உடலை 4,000 மீட்டர் தூரத்தில் கண்­டு­பி­டித்­துள்­ளனர். முற்­றிலும் பனியால் முடப்­பட்டு மெழுகு சிலை போல் இருக்கும் எலி­னாவை அவர் அணிந்­தி­ருந்த ஜாக்கெட் மூலம் அடை­யாளம் கண்­டுள்­ளனர்.

எலி­னாவி தாய் மற்றும் தந்தை இறந்த நிலையில் எலி­னாவின் உடல் கண்­டுப்­பி­டிக்­கப்­பட செய்தி அவ­ரது உற­வி­னர்­க­ளிடம் தெரி­விக்­கப்­பட்­டது.

இது­கு­றித்து எலி­னாவின் உற­வி­னர்கள் கூறும்­போது, ‘‘நாங்கள் எலி­னா­வுக்­காக 30 வரு­டங்கள் காத்­தி­ருந்தோம். அவ­ளுக்கு என்ன ஆயி­ருக்கும் என்று நாங்கள் முன்­னரே கணித்­தி­ருந்தோம்.

இருப்­பினும் அவள் எங்கோ தப்பி சென்றுருப்பாள். இல்லை அவளை யாராவது கடத்தி இருப்பார்கள் என்று நினைத்திருந்தோம்”என்று கூறியுள்ளதோடு. அனைவரும் அதிர்ச்சியில் பூரித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right