சோமாலிய தலைநகர் மொகடிசுவில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் பாடசாலையொன்று முற்றாக தரைமட்டமாகியுள்ளதாகவும் பல மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

அரசகட்டிடமொன்றிற்கு முன்னாள் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பிலேயே பாடசாலை முற்றாக சிதைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

அம்புலன்ஸ்களின் நடமாட்டத்தை காணமுடிகின்றது இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மக்கள் தேட ஆரம்பித்துள்ளனர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடிபாடுகளுக்குள் மனித கரமொன்றையும் இரத்தக்கறைகளையும் காணக்கூடியதாக உள்ளது என ரொய்ட்டர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.