தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை 7.00 மணிக்கு தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. 

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். 

நினைவுப் பேருரையினை யாழ்ப்பாண பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆற்றினார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன்  மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.