நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதில் இராணுவத்தைச் சேர்ந்த 30 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

நைஜீரிய நாட்டில் கிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்ற  நிலையில் போக்கோஹரம் தீவிரவாதிகள் நாட்டில் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்குட்பட்ட ஆட்சியை கொண்டு வரவேண்டம் என்று ஆயுதமேந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக போக்கோஹரம் தீவிரவாதிகளுக்கும், நைஜீரிய நாட்டு இராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையிலேயே அந்நாட்டின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள ஜாரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள நைஜீரிய இராணுவ தளத்தின் மீது பல்வேறு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த போக்கோஹரம் தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தை சேர்ந்த உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.