கினிகத்தேன பேருந்து தரிப்பிடம் மற்றும் 16வர்த்தக நிலையங்களுக்கான அடிகல் நாட்டு விழா மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் முன்னிலையில் இடம்பெற்றது.

கினிகத்தேன நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தை நவினமுறையில் புனரமைக்கும் நோக்கில் இரண்டு மாடி கட்டிடங்களையூம் 16வர்த்தக நிலையங்களுக்குமான அடிகல் நாட்டுவிழா இன்று மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி ஜம்பிக்கரனவக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கபட்டது

 

இவ் வேலைத்திட்டத்திற்காக 90மில்லியன் ரூபா நிதி, மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி ஜம்பிக்கரனவக்க தலைமையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்த்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச மற்றும் பலரும் கலந்து கொண்டனர் .