இலங்கை இளைஞன் தீவிரவாதமயப்படுத்தப்பட்டது எப்படி- அவுஸ்திரேலியா விசாரணை

Published By: Rajeeban

02 Sep, 2018 | 09:12 AM
image

இலங்கையை சேர்ந்த  இளைஞன்தீவிரவாதமயப்படுத்தப்பட்டது எப்படி என்பது குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் பிரசித்திபெற்ற பல்கலைகழகத்தை சேர்ந்த இலங்கை பிரஜை தீவிரவாதமயப்படுத்தப்பட்டு அவுஸ்திரேலியாவின் மிக முக்கிய பிரமுகர்களை கொலை செயவதற்கான திட்டங்களை தீட்டியமை குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன

இருபத்தைந்து வயதான நிசாம்டீனிடமிருந்து கைப்பற்ற ஆவணங்கள் மூலம் அவர் முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் வெளிவிவகார அமைச்சர் உட்பட பலரை இலக்கு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இலங்கை பிரஜையிடமிருந்து மீட்கப்பட்ட ஆவணங்களில் ஐஎஸ் அமைப்பு குறித்த விடயங்களும் காணப்படுகின்றன.

கைதுசெய்யப்பட்ட நபரிற்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக நாங்கள் நம்புகின்றோம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

நிஜாம்டீனிடமிருந்து கைப்பற்ற ஆவணத்தில் சிட்னியின் பிரசித்தி பெற்ற இலக்குகள் பற்றி தகவல்கள் காணப்படுகின்றன என பொலிஸ்வட்டாரங்கள் அவரின் நாட்குறிப்பு  தெளிவான அச்சமூட்டக்கூடிய விடயங்களை கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் அவர் தனித்து செயற்பட்டமை தெரியவந்துள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பிரஜைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானவை அவற்றை சாதாரணமாக கருத முடியாது எனவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிஜாம்டீனின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள பயங்கரமான விடயங்களை நிறைவேற்றும் திறன் அவரிடம் உள்ளதா என ஆராய்வதற்காக அதிகாரிகள் உளவியலாளர்களையும் பயன்படுத்துகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20