வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்களால் யாழில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது அங்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தை நேற்றைய தினம் குறித்த தமிழ் பத்திரிகை மேற்கண்ட படத்தில் குறிப்பிட்டிருந்தவாறு தலைப்பிட்டு செய்தியாக வெளியிட்டிருந்தது. 
 

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்.நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக கூடிய குறித்த வடமாகாண சபை உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் குறித்த தமிழ் பத்திரிக்கைக்கு எதிராக கோசங்களை எழுப்பி நேற்றைய பத்திரிக்கையை தீயிட்டு கொளுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.