நிவ்யோர்க் நகரிலிருந்து புது டெல்லிக்கு சென்ற இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்றில் பயணி ஒருவர் தன்னுடன் பயணித்த பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த அநாகரீகமான செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த நபர் அதிகமான மது போதையின் காரணமாகவே பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளதாக சக பயணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பயணி தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மது போதையில் செய்த அநாகரீகமான செயலாள் ஏனைய பயணிகளும் பிரயாணத்தின் போது சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

எனினும் விரைந்து செயற்பட்ட விமானப் பணிப்பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வேறு இருக்கைக்கு மாற்றியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் இந்திராணி கோஷ் தனது தாய்க்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்திராணி இந்திய விமானத்தில் தனது தாய்க்கு நேர்ந்த அவமரியாதையான செயலுக்காக குறித்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அப் பதிவை மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு சுஷ்மா சுவராஜ் மற்றும் ஏர் இந்திய நிறுவனத்தை டெக் செய்து பதிவேற்றியிருந்தார்.  

இந்திராணியின் இப் பதிவைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்தி விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து ஆணையகத்திற்கு அறிக்கை அளிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அநாகரீகமான செயல் தொடர்பாக குறித்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.