இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் இங்கிலாந்தின் சகலதுறைவீரர் மொயீன் அலியின் பந்து வீச்சில் தடுமாறியமை குறித்து  சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் அவ்வளவு சுலபமாக தங்கள் விக்கெட்களை இழந்தமை ஏமாற்றமளிக்கின்றது அவர்கள் இதனை விட சிறப்பாக விளையாடியிருக்கவேண்டும் எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஹர்டிக் பண்ட்யாவும் அஸ்வினும் ஆட்டமிழந்த விதம் ஏமாற்றமளித்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மோசமான சொட்களை விளையாடினார்கள் அவர்களே தாங்கள் விளையாடிய விதம் குறித்து ஏமாற்றமடையவேண்டும் அவர்கள் நிலைத்து நின்று ஆடியிருந்தால் இந்தியா இதனை விட வலுவான நிலையிலிருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.