152 ஆவது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு சமாதான நகரம் என அழைக்கப்படும் ஹட்டன் நகரம் சுத்தப்படுத்தும் வேலை திட்டம் ஒன்றினை ஹட்டன் பொலிஸ் நிலையம், ஹட்டன் டிக்கோயா நகர சபை ஆகியன ஒன்றிணைந்து இன்று  காலை 7.30 மணியளவில் முன்னெடுத்தன.

 

குறித்த  சிரமதான பணிக்கு ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சமாதான குழுக்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், வேன் சாரதி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்கள் அகியன இணைந்திருந்தன.

ஹட்டன் மல்லியப்பு சந்தி தொடக்கம் டிக்கோயா வரை சன நடமாடும் பகுதிகள், பொது இடங்களில் மற்றும்  வீதியில் இரு மருங்கிலும் கொட்டிக்கிடக்கும் குப்பைகள் பிளாஸ்ரிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள் உட்பட அனைத்து கழிவுகளும் இதன் போது அகற்றப்பட்டதுடன் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கடை உரிமையாளர்கள் மற்றும் வீட்டுரிமையாளர்களும் வலியுறுத்தப்பட்டன. 

 குறித்த இந்நிகழ்வுக்கு ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்கு பொறுப்பான அத்தியட்சகர் அம்பன்பிட்டி, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலசந்திரன், பிரதி தலைவர் ஏ.ஜே.எம்.பாமிஸ் உட்பட ஹட்டன் கோட்டத்திற்குட்பட்ட எட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.