சேலம் அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். 

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இன்று அதிகாலை மாமாங்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் சொகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த 20க்கு மேற்பட்டோர் சேலம் அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.