பெண்கள் அழகாக இருப்பதால் தான் பாலியல் வல்லுறவு சம்பவம் அதிகமாக நடக்கிறது என பிலிப்பைன்ஸ்  ஜனாதிபதி  ரோட்ரிகோ டியூட்ரெட்  தெரிவித்த கருத்தால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியூட்ரெட்  போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி இவர் பொது மேடைகளில் தெரிவிக்கும் கருத்துக்களால்  பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. கடந்த ஆண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவு குறித்து கருத்து சர்ச்சைக்குரியதானது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

 பொலிஸ் அறிக்கையின்படி தவாயோ நகரில் பல பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பல அழகிய பெண்கள் உள்ளனர். அதனால் தான் இங்கு அதிக அளவில் பாலியல் வல்லுறவு  சம்பவங்கள் நடக்கின்றன. முதலில் பெண்கள் சம்மதிக்க மாட்டார்கள். வேண்டாம் என்பார்கள், மறுப்பு தெரிவிப்பார்கள். அதனால் தான் பாலியல் வல்லுறவு சம்பவம் நடக்கிறது என நகைச்சுவையாக  சிரித்துள்ளார். 

இது விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. ஜனாதிபதி டியூட்ரெட்டின் கருத்துக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.