பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் ஐ.நா. அமைப்பிற்கு நிதி வழங்குவதை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் யூன்.என்.எப்.ஆர்.ஏ .அமைப்பின் நடவடிக்கைகள் சரிசெய்ய முடியாத அளவிற்கு பிழையானவை என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர் நவுரட் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் இது குறித்து ஆழமாக ஆராய்ந்த பின்னர் இந்த அமைப்பிற்கு நிதியுதவியை வழங்குவதில்லை என  தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை பாலஸ்தீன மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான தாக்குதல் என வர்ணித்துள்ள பலஸ்தீன ஜனாதிபதியின் பேச்சாளர் ஒருவர் இது ஐ.நா. தீர்மானங்களிற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. இது குறித்து இதுவரை கருத்துதெரிவிக்கவில்லை. யூன்.என்.எப்.ஆர்.ஏ. அமைப்பு மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளில் உள்ள ஐந்து மில்லியன் மக்களிற்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றது.

டிரம்ப் நிர்வாகம் பாலஸ்தீனியர்களை சீற்றத்திற்குள் உள்ளாக்ககூடிய பல நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.