ஹெரோயின் போதைப்பொருளுடன் கடவத்தை மன்கட பகுதியில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.740 கிராம் மற்றும் 145 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நிலையில் இன்று போதை தடுப்பு பிரிவினரால்  குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து கைப்பற்றபட்ட ஹெரோயினின் பெறுமதி  88 இலட்சம் ரூபா என போதை தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது