பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறுவனின் பூதவுடல் நல்லடக்கம்

Published By: Daya

01 Sep, 2018 | 09:40 AM
image

சளித்தொல்லையால் அவதியுற்று பரிதாப மரணத்தைத் தழுவிக்கொண்ட கலஹா தெல் தோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பச்சிளம்பாலகன் சங்கர் சஜியின் பூதவுடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இதன்போது பெருமளவிலான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய அதேவேளை இறுதிக்கிரியைகளிலும் பங்கேற்றிருந்தனர். 

கடந்த 28ஆம் திகதி கலஹா வைத்தியசாலையில்  சிகிச்சையளிக்கப்படாததால் குழந்தை உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பேராதனை வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி  அமல் உதயநாத்  ஜயவர்தனவின்  பகிரங்க தீர்ப்பினையடுத்தே குழந்தையின் பூதவுடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.

சம்பவ தினமான  கடந்த 28 ஆம்திகதி கலஹா  வைத்தியசாலை வைத்தியர்களின் கவனயீனத்தால்தான்  குழந்தை உயிரிழந்தது என தெரிவித்து ஆத்திரம் கொண்ட பிரதேச வாசிகள் வைத்தியசாலையை சூழ்ந்து  கடும் ஆர்ப்பாட்டத்தையும் தாக்குதல்களையும் நடத்தினர்.

இதேவேளை இக்குழந்தையின் பிரேத பரிசோதனையை பேராதனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.ஏ.எச்.பி. விஜேரத்ன மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். 

திடீர் மரண விசாரணை அதிகாரி அமில உதயநாத் ஜயவர்தன விசாரணையை நடத்தி குழந்தையின் உடல் உறுப்புக்கள் சிலவற்றை அரச இராசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி அறிக்கைகளை பெற்று சமர்ப்பிக்குமாறு   உத்தரவிட்டுள்ளதுடன் பகிரங்க தீர்ப்பினையும் வழங்கியிருந்தார். பின்னர் குழுந்தை சங்கர் சஜியின் பூதவுடல் கலஹா  மலர்ச்சாலைக்கு  எடுத்துச் செல்லப்பட்டது. 

இதேவேளை   கண்டி மேலதிக நீதிவானின் அறிவுறுத்தலின் பிரகாரம் குழந்தையின் சடலம் அவரது சொந்த வீட்டுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என மரண விசாரணை அதிகாரி குழந்தையின் பெற்றோருக்கு தெரிவித்தார். மேலும் குழந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு குழந்தையின் பெற்றோருக்கு பொலிஸாரால் தெளிவுப்படுத்தப்பட்டது.

இதன் பின்னரே குழந்தையின் பூதவுடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31