Dihydrotestosterone என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமோ இல்லையோ இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அதாவது தலைமுடி உதிரத் தொடங்கி வழுக்கையாகிவிடுவதற்கும், இந்த Dihydrotestosteroneக்கும் தொடர்பு உண்டு.

பொதுவாக வழுக்கை யாருக்கு விழும் என்றால், மரபணு காரணமாகவே வழுக்கை விழுகிறது. ஒரு சிலருக்கு எந்த வயதில் விழவேண்டுமோ அந்த வயதில் விழத் தொடங்கிவிடும். இதனை தவிர்க்கமுடியாது.

ஆனால் சற்று தள்ளி வைக்கலாம். அதே போல் வழுக்கை விழுவதற்கு மற்றொரு காரணம் தான் இந்த Dihydrotestosterone. இது ஒரு அண்ட்ரோஜன் ஹோர்மோன். இது இயல்பான அளவில் சுரந்தால் முடியின் வளர்ச்சி சீராகவும் இருக்கும் சிறப்பாகவும் இருக்கும். இதன் சுரக்கும் தன்மையில் அக மற்றும் புற காரணிகளால் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு சமச்சீரற்றதன்மை உண்டானால் முடி கொட்டத் தொடங்கிவிடும். இந்த ஹோர்மோன் முடியின் பரப்பு, வளர்ச்சி மற்றும் ஆயுளை குறைத்துவிடுகிறது.

இதற்கு தற்போது பி. ஆர். பி. எனப்படும் சிகிச்சை முறையை பயன்படுத்தி சிகிச்சையளிக்கிறார்கள். இதில் பலருக்கு பலனும் கிடைத்திருக்கிறது. இருப்பினும் இது குறித்த ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.