கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த கடுகதி புகையிரதம் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடியை சேர்ந்த 64 வயதுடைய பா.சிவச்செல்வம் என்பவரே கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 

 சம்பவம் குறித்துமேலும் தெரியவருவதாவது , 

குருணாகலில் இருந்து யாழ்.நோக்கி வருவதற்காக புகையிரதத்தில் குறித்த நபர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மதவாச்சிக்கு அண்மித்த பகுதியில் புகையிரதம் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. 

அதன் போதே அவர் கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 

காயமடைந்த நபர் தற்போது அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த கல் வீச்சு தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.