சேருவில விகாரைகளுக்கான இரு கட்டிடங்கள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 

திருகோணமலை மாவட்டம் சேருவில விகாரைகளுக்கான புதிய இரு கட்டிடங்களை இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

மேலும் குறித்த விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம கலந்துகொண்டார்.

சேருவில விகாரை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 135 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த மதகுருக்களுக்கான தங்குமிட வசதியைக் கொண்ட கட்டிடமும், 20 மில்லியன் ரூபா செலவில் பிரித் வழிபாடு மண்டபமும் இதன் போது திறந்து வைக்கப்பட்டன .

சேருவில விகாரை வீதிக்கான புதிய வீதி ஒன்றும்  திறக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம ,பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜீத் பெரேரா, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் உட்பட உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.