மூத்த ஊடகவியலாளர் நாகராசா நவரட்ணராஜா (நவம் ஜி.எஸ்.) யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

வீரகேசரி இணையத்தளம் மற்றும் பத்திரிகையின் யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேச ஊடகவியலாளராக இவர் இறக்கும் வரை கடமையாற்றியிருந்தார்.

 கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இவரின் கால் முறிவடைந்திருந்த நிலையில், அவர் எழுந்து நடக்க முடியாமல் இருந்த இவருக்கு, இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.