மஹியாங்கனையில் இருந்து நாவலப்பிட்டி பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டுவிலகி வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.மஹியாங்கனையில் இருந்து நாவலப்பிட்டி பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்று நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியின் உலப்பனை பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி குடியிருப்பு ஒன்றின் மீது குடைசாய்ந்தத்தில் 16 பேர் காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.

சம்பவமானது நேற்று  இரவு 12 மணியளவில் உலப்பனை முஸ்லிம் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

குறித்த வேன் வண்டியில் பயணித்தவர்கள் நாவலப்பிட்டி கலப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மஹியாங்கனை பகுதியில் வழிபாடு ஒன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த வேன் வண்டியில் அதிகமாக சிறுவர்களே பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வேன் குடைசாய்ந்த பகுதியில் உள்ள வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, குறித்த வேன் வண்டியும் சேதமடைந்துள்ளதாக கம்பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேன் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.