ஹொரவபொத்தானை -  வெலிமுவபொத்தன பிரதேசத்தில் கூரிய ஆயுத்தில் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.