இந்தியா - ஹரியாணா மாநிலம் இன்ஸ்டாகிராம் காதலால் 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ஹரியாணா மாநிலம் குருகிராமின் 84ஆவது பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் வசித்து வரும் பல்கலைக்கழக மாணவர் பையுஷ் மற்றும் தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளனர்.

இவர்களது நட்பு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.

ஆசை வார்ததைகளை கூறி பையுஷ் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

சிறுமியின் நடத்தையில் மாற்றங்கள் தென்படவே சிறுமியை பின் தொடர்ந்த தாய்க்கு பையுஷ் தன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தெரிய வந்தள்ளது.

விடயமறிந்த  சிறுமியின் தாய் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த பையுஷை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வரும் பொலிஸார், 

“குற்றஞ்சாட்டபட்டவர் சிறுமியை இரு முறை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியுள்ளார்” என கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பையுஷ் மீது பல குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.