இந்தியா – தி: நகர் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுடலமாக மீடகப்பட்டவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயதான லிண்டா இரேனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சென்னை – தி : நகர், வெங்கடேசன் தெருவில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த 27ஆம் திகதி மதியம் 12.30 மணியளவில் குறித்த பெண் ஊடகவியலாளர் அறை எடுத்து தங்கியுள்ளார்.

30ஆம் திகதி வரை குறித்த பெண் ஊடகவியலாளர் அறை எடுத்திருந்துள்ளார்.

இதன் படி நேற்று 2 மணிக்கு அவர் வெளியேற வேண்டிய  நேரம் வந்தும் வெளியேறாமையினாலும், மதிய உணவு தொடர்பான அறிவித்தல் எதுவும் லிண்டாவிடமிருந்து வராமையினாலும்  அறை ஊழியர் லிண்டாவின் அறை கதவை தட்டியுள்ளார்.

வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாமையினால் மாற்றுச் சாவியை எடுத்துச் சென்று லிண்டாவின் அறைக் கதவை திறந்துள்ளார் குறித்த ஊழியர்,

கதவை திறந்த ஊழியர் லிண்டா படக்கையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விடுதியின் முகாமையாளரிடம் அறிவித்துள்ளார்.

முகாமையாளரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சோதனையிட்ட போது லிண்டா இறந்து வெகு நேரமாகியமை தெரிய வந்துள்ளது.

லிண்டாவின் படுக்கைக்கு அருகில் இருந்து விஷ போத்தல் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

லிண்டா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட லிண்டாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.