டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 77 வயது மதிக்கதக்க பெருமாள் லெட்சுமன் 09 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி முதியோர் தனது உறவினர்கள் வசிக்கும் அக்கரப்பத்தனை வேவரல்லி தோட்டத்துக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வரும் வழியில் அப்பகுதியில் இருந்த மரமொன்றில் இருந்து குளவி கூடு களைந்து வந்து இவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக டயகம பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் முலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்)