கவர்ச்சி நடிகை ராய் லட்சுமி நடித்து வரும் நீயா=2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

நடிகை ராய் லட்சுமி, நடிகை கேதரீன் தெரசா, நடிகை வரலச்மி சரத்குமார், நடிகர் ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நீயா=2. இப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எல் சுரேஷ். இவர் ஏற்கெனவே விமல் நடிப்பில் தயாரான எத்தன் என்ற படத்தை இயக்கியவர்.

இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நீயா=2 படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

படம் குறித்து இயக்குநர் சுரேஷ் பேசும் போது, இது பாம்பு பழிவாங்கும் படமல்ல என்றும், பாம்புகள் கொமடியுடன் காதல் செய்யும் படம் இது என்றும், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாகியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.