246 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 19 ஓட்டத்துடன் இந்தியா

Published By: Vishnu

31 Aug, 2018 | 11:40 AM
image

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இந்திய அணியின் அசத்தலான பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 76.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

சவுத்தாம்டனில் நேற்றைய தினம் இலங்கை நேரப்படி 3.30 மணியளவில் ஆரம்பமான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடர்கள் கொண்ட நான்காவது போட்டித் தொடரில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.

இதன்படி இங்கிலாந்து அணி சார்பாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஜோடி களம் புகுந்த வேகத்திலேயே ஒரு ஓட்டங்களை அணி பெற்றிருந்த வேளை 2.1 ஆவது ஓவரில் ஜென்னிங்ஸ் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ளாது டக்கவுட் முறையில் பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இவருக்கு அடுத்த படியாக களமிறங்கிய அணித் தலைவர் ரூட்டும் அதிக நேரம் தாக்குப் பிடிக்காமல் நான்கு ஓட்டங்களுடன் இஷான் சர்மாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்களும் நீண்ட நேரம் நிலைத்து நிற்க்காது ஆட்டமிழந்தமையினால் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து கதிகலங்கியது.

அதன்படி ஜோனி பிரிஸ்டோ 6 ஓட்டங்களுடனும் குக் 17 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர் 21 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் மொயின் அலியும்  குர்ரனும் சற்று நிதானமாக ஜோடி சேர்ந்து ஆடி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். இருப்பினும் இந்த ஜோடி 81 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மொயின் அலி, 59.3 ஆவது ஓவரில் அஷ்வினின் சுழலில் சிக்கி பும்ராவிடம் பிடிகொடுத்து 40 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இவரையடுத்து ரஷித் 6 ஓட்டங்களுடனும் புரொட் 17 ஓட்டங்களுடனும் நிதானமாக ஆடி வந்த குர்ரன் 78 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டுக்களையும் ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை  இந்திய அணி ஆரம்பித்தது. இந்திய அணி சார்பாக தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கினர். இறுதியாக முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09