வர்த்­தகம் மற்றும்  எண்ணெய் விற்­பனை  என்­பன தொடர்பில்  ஈரா­னுக்கு  அளிக்­கப்­பட்ட உத்­த­ர­வா­தங்கள் உரி­ய­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­விட்டால்  அணு சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து அந்­நாடு வெளி­யேற நேரிடும் என ஈரா­னிய உச்ச நிலைத் தலைவர் ஆய­துல்லாஹ் அலி கமெய்னி எச்­ச­ரித்­துள்ளார்.

ஈரா­னிய தலை­நகர் தெஹ்­ரானில்  இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில்  அந்­நாட்டு ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி சகிதம் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் இவ்­வாறு எச்­ச­ரித்­துள்ளார்.

2015  ஆம் ஆண்டு உலக அதி­கார சக்­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேற்­படி உடன்­ப­டிக்­கையை ஐரோப்­பிய நாடுகள் காப்­பாற்றும் என்­பதில் தனக்கு நம்­பிக்கை கிடை­யாது என  அவர்   தெரி­வித்தார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்  அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து கடந்த மே மாதம் தனது நாட்டை வாபஸ் பெற்றுக் கொண்­ட­தை­ய­டுத்து அந்த உடன்­ப­டிக்கை முறி­வ­டையும் அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

டொனால்ட் ட்ரம்பின் மேற்­படி நகர்­விற்கு கடும் எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்த பிரித்­தா­னியா, பிரான்ஸ் மற்றும்  ஜேர்­மனி  ஆகிய நாடுகள்  அந்த உடன்­ப­டிக்­கையில் தொடர்ந்­தி­ருக்க உறு­தி­ய­ளித்­துள்­ளன. மத்­திய கிழக்கில் அணு ஆயு­தங்கள் தொடர்பில் இடம்­பெ­றக்­கூ­டிய பந்­த­ய­மொன்றை தடுத்து நிறுத்த மேற்­படி உடன்­ப­டிக்கை அவ­சி­ய­மா­னது என அந்த நாடுகள் தெரி­வித்­துள்­ளன.

இந்­நி­லையில்  தற்­போது ஈரான்  தனக்கு அளிக்­கப்­பட்ட உத்­த­ர­வா­தங்கள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் மேற்­படி உடன்­ப­டிக்­கையைத் தானும்  கைவிடத் தீர்­மா­னித்­துள்­ள­தாக  ஆயதுல்லாஹ் அலி கமெய்னி கூறினார்.

ஈரானிய பொருளாதாரத்தைக் கையாளும் விதம் குறித்து ஜனாதிபதி ஹஸன் ரோஹானி கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார்.