கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு கடத்தப்பட தயார் நிலையில் மீனவப் படகொன்றில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தினை கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 7 கிலோ நிறைக் கொண்ட 34.5 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களே இவ்வாறு யாழ். கடற்படையினரால் மாதகல் கடற்பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

அத்துடன் அதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரியும் தாம் கைதுச் செய்ததாகவும் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவின் யாழ். அலுவலகத்திடம் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.