அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கரு­ணா­நி­திக்கு அஞ்­சலி செலுத்தும் தீர்­மானம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

தி.மு.க. தலை­வ­ர் கரு­ணா­நி­தியின் மறை­வுக்கு  இலங்கை உட்­பட பல நாடு­களும்  அஞ்­சலி செலுத்­தின. இந்த நிலையில் அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தில்  கரு­ணா­நி­திக்கு அஞ்­சலி செலுத்தும் தீர்­மானம் கொண்டு வரப்­பட்­டது.  இந்தத் தீர்­மா­னத்தை அமெ­ரிக்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டேனி கே டெவிஸ் கொண்டு வந்­தி­ருக்­கிறார்.

அதில், "அமெ­ரிக்க வாழ் தமி­ழர்கள் பலர் இந்த சிறந்த நபரைப் பற்றி எனது கவ­னத்­துக்குக் கொண்டு வந்­தனர்.

இது தொடர்பில் தி.மு.­க. தனது டுவிட்டர் பக்கத்தில் அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்­துக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளது.