இலங்­கையில் ஜன­நா­ய­கத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் உறு­தி­செய்து நல்­லி­ணக்­கத்­தையும் நிரந்­தர சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மைக்கும். அர­சாங்­கத்தை சர்­வ­தேச ரீதியில் முன்­னெ­டுத்து செல்­வ­தற்­கா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி  பாராட்­டி­யுள்ளார்  என  ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

 

நேபா­ளத்தின் காத்­மண்டு நகரில் இடம்­பெற்­று­வரும் வங்­காள விரி­குடா வலய நாடு­களின் பல்­துறை தொழில்­நுட்­ப, பொரு­ளா­தார ஒன்­றி­ய­மான பிம்ஸ்டெக்  அமைப்பின் அரச தலை­வர்கள் மாநாட்டில் பங்­கு­பற்­று­வ­தற்­காக நேபா­ளத்­திற்கு சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­விற்கும்    இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்­கு­மி­டையில்  நேற்று பிற்­பகல் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே இந்­திய பிர­தமர் மேற்­கண்­ட­வாறு  தெரி­வித்­துள்ளார்.

இதன்­போது ஜனா­தி­ப­தி­யுடன்  சுமுக கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்ட இந்­திய பிர­தமர்  எதிர்­வரும் செப்­டெம்பர் 03ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­ப­தியின்   பிறந்த தினத்­திற்கும் தனது  முன்­கூட்­டிய  நல்­வாழ்த்­துக்­களை தெரி­வி­த்தார்.  

அத்­துடன் நான்­கா­வது பிம்ஸ்டெக் அரச தலை­வர்கள் மாநாட்டின் இறு­தியில் அதன் தலை­மைத்­துவம் இலங்கை ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளமை தொடர்­பில் கருத்துத் தெரி­வித்த இந்­திய பிர­தமர்  பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலை­வ­ராக  மைத்­திரி­பால சிறி­சே­ன­வினால் வழங்­கப்­படும் எந்­த­வொரு பணி­யையும் உரி­ய­வாறு நிறை­வேற்ற தான் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

மிகுந்த அனு­ப­வ­மு­டைய அர­சியல் தலைவ­ரான ஜனா­தி­பதி  மைத்­திரி­பால சிறி­சே­ன வின் தலை­மைத்­து­வத்தின் கீழ் பிம்ஸ்டெக் அமைப்பு பெரிதும் பலப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்த இந்திய பிரதமர்  அதனூடாக பிம்ஸ்டெக் மாநாட்டின் நோக்கினையும் குறிக்கோளையும் அடைவதற் கான வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.