(நா.தனுஜா)

நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட சமாதானத்துடன் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் மிக வேகமாக வளச்சியடைந்து வருகின்ற நாடாக இலங்கை உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளடங்கலாக 45 நாடுகளின் பங்குபற்றுதலுடன் சர்வதேச ரீதியிலான 8 ஆவது பாதுகாப்பு செயலமர்வு இன்றுகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இதன்போதே ஜனாதிபதியின் பதிவுசெய்யப்பட்ட உரை இச்செயலமர்வில் திரையிடப்பட்டது. அந்த உரையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பிலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ள விடயங்கள் தொடர்பிலும் அவ் உரையில் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை விடவும், நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கான விடயங்கள் பரவலாக ஆராயப்படுவதுடன், அவை அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.