நியூயோர்க் நகரில் நபரின் கத்திக் குத்து - ஒருவர் பலி; இருவர் காயம்

Published By: Robert

08 Mar, 2016 | 01:57 PM
image

 அமெரிக்க நியூயோர்க் நகரில் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்று பெண்ணொருவரின் முகத்தில் கத்தியால் வெட்டி வீடுவாசலற்ற ஒருவருக்கு தீ வைத்த நபரொருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் நேற்று மாலை அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஜேம்ஸ் பற்றிக் டில்லொன் (23 வயது) என்ற மேற்படி நபர், அஸ்டன் பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு அயலில் வசித்த 39 வயது பெண்ணான பெத் கார்பியோ என்பவரின் முகத்தில் கத்தியால் வெட்டிய பின் அவரது தலையில் செங்கல்லொன்றால் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற வேளை பெத் கார்பியோ தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து மதுபான நிலையமொன்றுக்குச் சென்ற டில்லொன், அங்கு 55 வயது நபரொருவரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

அவர் 61 வயது வீடுவாசலற்ற நபர் ஒருவருக்கு தீ வைத்துள்ளார். தற்போது அந்த நபர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டில்லொனைத் தேடிக் கண்டுபிடித்து கைதுசெய்வதற்குச் சென்ற பொலிஸார் மீது, அவர் இரசாயன திரவமொன்றை விசிறி அவர்களை காயமடையச் செய்துள்ளார்.

அவர் மனம் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17