இலங்கையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்லும் பிரேரணையை ஏற்றுக் கொண்டது வட மகாண சபை

Published By: Vishnu

30 Aug, 2018 | 07:29 PM
image

இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்லல். வேண்டுமெனவும், இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறும், வடகிழக்கு பிரதேசத்தில் ஐ.நா.சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கு உதவுமாறும் ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளை கோருகின்ற பிரேரணை வட மாகாண சபை அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்விலே குறித்த பிரேரணையை வட மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்வைத்ததையடுத்து இதனை மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் வழிமொழிந்தார். 

இதனையடுத்து வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, குறித்த பிரேரணையானது கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் ஐ.நா. சபைக்கு அதனை அனுப்பும்போது முறையான ஆவணமாக மொழிநடையில் மாற்றம் செய்யவேண்டும். எனவே இதற்கு குழு ஒன்றிணை அமைத்து அதற்கேற்ப அனுப்புவதுதான் சிறந்தது என்றார். 

அதனை ஏற்றுக்கொண்ட பிரேரணையை முன்வைத்த எம்.கே.சிவாஜிலிங்கம் அவைத் தலைவர் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து அதற்கு  செயற்படுவதற்கு சம்மதம் தெரிவித்தார். 

இதற்கு அமைவாக மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் , தவராசா, அஸ்மின், சர்வேஸ்வரன், சஜந்தன் ஆகியோரைக் கொண்டு  அவைத் தலைவர் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. குறித்த குழுவானது இரண்டு ஒரு தினங்களில் கூடி முறைப்படியான தீர்மானத்தை அடுத்த சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04