அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நடன கலையை கற்றுவரும் நடன மாணவிகளுக்கு பாரம்பரிய நடனக் கலைமுறை பற்றிய பயிற்சிப் பட்டறை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சமுக சேவைகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நடன பயிற்சிப் பட்டறையானது கிழக்கு மாகாண பண்பாட்டலுவளர்கள் திணைக்களமும், திருக்கோவில் பிரதேச கலாசாரப் பிரிவும் இணைந்து நடத்திதானார்கள்

இன் நடனப் பயிற்சிப் பட்டறை அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு அதிகாரியும், திருக்கோவில் பிரதேச பதில் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல்.தௌபிக் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் கலந்து கொண்டு பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்து வைத்ததுடன் நடனப் பயிற்சியை திருக்கோவில் நடன ஆசிரியரியை திருமதி தங்கமாணிக்கம் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்.

நடனப் பயிற்சியின் இறுதியில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கலாசார உத்தியோத்தர்களும் கலந்துகொண்டு நடன மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.