அமெரிக்காவில் கறுப்பின சிறுவனைக் கொன்ற வழக்கில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹிஸ்பேனிக் நகரில் ஒரு வீட்டில் சிறுவர்கள் சட்டவிரோதமாக மது விருந்துபசாரத்தில் ஈடுபட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

பொலிஸார் வீட்டை சுற்றி வளைத்த சந்தர்ப்பத்தில் மது விருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர்களில் சிலர் காரில் தப்பித்துச் சென்றுள்ளனர்.

பொலிஸார் காரை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தும் காரை நிறுத்த முயற்சித்தும் தப்பித்துச் சென்றதால் ஒலிவர் என்ற பொலிஸ் அதிகாரி காரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி சூட்டிற்கிலக்காகி 15 வயதான எட்வட்ஸ் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்க பொலிஸாரின் இன வெறியை இச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாக பலதரப்பட்டோராலும் அமெரிக்க பொலிஸ் விமர்சனத்திற்குள்ளாது.

இச் சம்பவம் தொடர்பாக 38 வயதான ஒலிவர் என்ற பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டதோடு பணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

ஒரு வருட காலமாக வாதப் பிரதி வாதங்கள் சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதி மன்றம் விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று ஒலிவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.