கிரிக்கெட் சபைத் தேர்தல் இடம்பெறும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்காக 5 பேர் கொண்ட குழுவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு சர்வதேச கிரிக்கட் சபை ஆலோசனை வழங்கியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் இடையில் டுபாயில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் சபை  கால அவகாசம் வழங்கியுள்ளது. 

எதிர்வரும்  9 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2019  வரை இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது ஐ.சி.சி..