மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கோரிய அழைப்பாணை உத்தரவின் பிரதியை வழங்குவதற்கு சட்ட சிக்கல் இல்லை என சர்வதேச பொலிஸாருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்  அறிவித்துள்ளது.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அவரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளம குறிப்பிடத்தக்கது.