யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி!!!

Published By: Digital Desk 7

30 Aug, 2018 | 04:07 PM
image

யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படை கப்பலான சுரநிமலவுடன் இணைந்து ஓகஸ்ட் 28ஆம் திகதி கடலில் பயிற்சியொன்றை முன்னெடுத்தது. 

இப் பயிற்சியானது கப்பல்களில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் திறன்களை முன்னேற்றுவதாகவும், இந்து - பசுபிக் பிராந்தியத்தில் நெருக்கடியான செயற்பாடுகளில் மாலுமிகளின் பரந்துபட்ட திறன்களை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.

இப் பயிற்சியின் போது தொடர்பாடல்கள் மற்றும் உத்திகளை கையாள்வது குறித்த பயிற்சிகளை மேற்கொள்ளும் நிமித்தம் பல்வேறு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. 

அங்கரேஜ் மற்றும் சுரநிமல கப்பல்களுக்கு மேலதிகமாக தரையிறங்கும் இரண்டு காற்றடைத்த படகுகள்  (LCACs), AH-1Z  கோப்ரா ஹெலிகொப்டர் மற்றும்  UH-1Y Huey ஹெலிகொப்டர் என்பனவும்  இப் பயிற்சியில் பங்குகொண்டன. 

“யு.எஸ்.எஸ் அங்கரேஜின் மாலுமிகள் மற்றும் கடற்படையினர் துறைமுக விஜயத்தின் போது எமது பங்காளிகளான இலங்கை கடற்படையினருடன் இணைந்து செயற்படுவது கௌரவமளிக்கிறது 

இந்த விஜயத்தின் போது நெருக்கமான குழு முயற்சியைக் காணக்கூடியதாகவிருந்ததுடன், இலங்கையும் அமெரிக்காவும் கடந்த வருடங்களில் பல்வேறு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டன. கடந்த ஏப்ரல் மாதம் வைத்தியசாலை கப்பலான யு.எஸ்.என்.எஸ் மேர்சி கப்பல் திருகோணமலைக்கு மேற் கொண்டிருந்த விஜயமானது இலங்கை மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினருக்கு இடையிலான உறவுகளைப் பல்படுத்துவதற்கு பரஸ்பர அர்ப்பணிப்புக்களை வெளிப்படுத்தியிருந்தது” என யுஎஸ் அம்பிஃபியஸ் படையின் 7வது பிரிவின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரெட் கூப்பர் தெரிவித்தார்.

இலங்கை கடற் படையினருடன் இணைந்து பயணித்ததன் மூலம் அங்கரேஜ் மாலுமிகளுக்கு தமது திறன்களை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம்  கிடைத்தது.  அமெரிக்க - இலங்கை கடற்படை பங்காண்மை வளர்ச்சியின் ஓரங்கமாக இலங்கை கடற்படையினருடன் அங்கரேஜ் பாதுகாப்பு, ஒத்துழைப்பு பயிற்சிகளை முன்னெடுத்திருந்ததுடன், ஓகஸ்ட் 2ஆம்  திகதி பசுபிக் வலய  (RIMPAC) பயிற்சியில் இலங்கை கடற்படையினர் பங்குபற்றியிருந்ததுடன், கடந்த வருடம் முதற்தடவையாக இலங்கையில் நடத்தப்பட்ட தயார்நிலை மற்றும் பயற்சி ஒத்துழைப்பு (CARAT) செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

“அங்கரேஜ் குழுவினரும் நானும் திருகோணமலையில் சிறப்பான நேரத்தை அனுபவித்திருந்ததுடன், இலங்கை கடற்படையினருடன் இணைந்து செயற்பட்டமையை இட்டு நாம் பெருமையடைகிறோம்,

தொடர்பாடல்களில் எமது நிபுணத்துவத்தை நாம் அதிகரித்தது மாத்திரமன்றி, இலங்கை கடற்படையினருடன் நாம் உறுதியான மற்றும் நீடித்த ஒத்துழைப்பை தொடர்ந்தும் பேணுவோம்" என்று யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் டெனிஸ் ஜக்கோ தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51