பெண்களுடன் ஹோட்டலுக்கு சென்று உணவை உட்கொண்டுவிட்டு பற்றுச்சீட்டு கொடுக்காமல் சென்ற நபருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 45 வயதான போல் கோன்ஸாலெஸ் என்ற நபர் பெண்கள் சிலருடன் பேசி அவர்களுக்கு விருந்து தருவதாக கூறி, ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார். 

நன்றாக உணவு  உட்கொண்ட பின்னர் அந்த பெண்ணை தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிக்கும் வழக்கத்தை போல் கோன்ஸாலெஸ் கொண்டுள்ளார். சுமார் 8 பெண்களை இவ்வாறு போல் கோன்ஸாலெஸ்  ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது நீதிமன்றத்தில் நடந்துவரும் குறித்த வழக்கில் தண்டிக்கப்பட்டால் அவருக்கு 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.