சமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

30 Aug, 2018 | 12:52 PM
image

சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று  காலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது.

தாயாகப் போற்றப்படும் பெண்கள் இன்று கேவலமாக இழிவுபடுத்தப்படுகின்றார்கள் இவ்வாறு கேவலப்படுத்தி வருகின்ற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . 

தங்களுடைய நிர்வாணப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு வரும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் மற்றும் கையடக்கதொலைப்பேசி, மாலைநேர வகுப்புக்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் . 

எதிர்வரும் சமூகம் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது ஏ9 வீதியுடாக வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தினை சென்றடைந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இணையத்தளங்களில் பெண்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வதை தடை செய்யவேண்டும், மீண்டும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனில் மக்களாகிய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் , பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி மாலைநேர வகுப்புக்களை தடை செய்ய வேண்டும் , தமது லீலைகளை வெளியிடுவதால் ஏனைய பெண்களின் நிலை பாதிக்கப்டுமென தெரிவித்துள்ளனர்.

 பாடசாலை மாணவர்களின் போதை பாவனையை முற்றிலும் தடுப்போம் என்ற பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில்  வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஞரையும் கையளித்தனர்.

மகஞரினை பெற்றுக்கொண்ட வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும் , உரிய தரப்பினருக்கு தகவலை வழங்கி தீர்வினை பெற்றுத்தருவதாக அவர் மேலும் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36