பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றைய தினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி  கோரியும் நாளை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அண்மைக் காலமாக எமது பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியும்  நாளைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் காலை பத்து மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.