சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனின் திருமணம் இன்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் , இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்தின் மருத்துவ மாணவியான சரூபா சமன்கி மனதுங்க என்ற பெண்ணுடன் இன்று சத்துர சேனாரத்ன திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

மேற்படி திருமணத்தை அலரி மாளிகையில் பல அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் அலரி மாளிகையில் இடம்பெறும் முதல் திருமணம் இது என குறிப்பிடப்படுகின்றது.