இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான சௌமிய மூர்த்தி தொண்டமானின் 105 ஆவது ஜனன தினத்தையொட்டி கொழும்பு இ.தொ.கா. தலைமையகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் இன்று இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

காலை 7 மணியளவில் பழைய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் சிலைக்கு ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், மத்திய மற்றும் ஊவா மாகாண அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இவர்களை தொடர்ந்து அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் குடும்ப அங்கத்தவர்கள் அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து இ.தொ.கா.வின் தலைமையகமான செளமியபவனின் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றன.