மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு அப் பகுதி மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக வைத்தியசாலை கழிவுகள் எரிக்கப்படுவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் மண்முனை வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட திராய்மடு பகுதியில் கடந்த காலங்களில் எரிக்கப்பட்டு வந்த நிலையில் மண்முனை பகுதி மக்கள் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டதையடுத்தே கழிவுகள் அப் பகுதியில் கொட்டப்பட்டு எரிப்பது நிறுதப்பட்டது.

இதனையடுத்தே வைத்தியசாலைக் சத்திர சிகிச்சை கழிவுகள் கடந்த சில வாரங்களாக வவுணதீவு வரை லொறியில் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் படகில் மாந்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனம் செலுந்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.